| பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான் நிர்ரஹீம் - அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருபெயாரால் (துவங்குகிறேன்) அஸ்ஸலாமு அழைக்கும் - சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாகுக ஏசு அஹிம்சையை கையாள மறுத்ததாக கூறும் பைபிள் – பாகம் 1, பாதசாரிகளை அடித்து வெளியேற்றிய ஏசு... அன்பார்ந்த வாசகர்களே, திரு உமர் அவர்களும், இன்னும் திரைக்கு பின் மறைந்து இருக்கும் அவரது தோழர்களும், பைபிளின் ஏசு ஒரு அஹிம்சாவாதி என்றும், முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் அஹிம்சையை போதிக்கவில்லை என்பது போலவும், பொய் பிரசாரம் செய்து கொண்டு இருகிறார்கள். திரு முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் அஹிம்சை வழியை போதிக்கவில்லை என்ற அவர்களின் பொய் கூற்றை நிரூபிக்க, திரு உமர் அவர்களும், இன்னும் திரைக்கு பின் மறைந்து இருக்கும் அவரது தோழர்களும் கால தாமதம் செய்யும் இவ்வேளையில், அவர்களது கூற்றுகளின் அடிப்படையில், பைபிளில் திரு ஏசு அவர்கள் அஹிம்சை முறையை நடைமுறை படுத்தினாரா என்ற ஆய்வை எல்லாம் வல்ல இறைவனின் கிருபையை நாடியவர்களாக நாம் துவங்கியுள்ளோம். திரு உமர் அவர்களே, இதற்க்கு முன்னரே பைபிளில் ஏசு அவர்கள் அஹிம்சையை போதிக்கவில்லை என்பதற்க்கு பல தெளிவான பைபிள் வசனங்களை முன்வைத்து இருந்தோம், அவற்றில் சில:
திரு உமர் அவர்களே, இதற்க்கு முன்னர் பைபிளில் ஏசு அவர்கள் அஹிம்சையை போதிக்க வில்லை எனறு நாங்கள் கோடிட்டு இருந்த பல தெளிவான பைபிள் வசனங்களுக்கு நீங்கள் இதுவரை பதில் அளிக்காத நிலையில், இப்பொழுது பைபிளின் இன்னொரு நிகழ்வை உங்கள் முன் வைக்க விரும்புகிறோம். இந்த நிகழ்வுக்கேனும் பைபிள் உதவிகொண்டு தெளிவான வசன ஆதாரங்களை முன் வைத்து எழுத்து விவாதம் வரைவீர்கள் என்ற நம்பிக்கையில் இந்த கட்டுரையை வரைய துவங்குகிறோம். திரு உமர் அவர்களே, திரு ஏசு அவர்கள் ஜெருசேலம் நகரை சென்றடைந்த பொழுது அங்கிருந்த புனிதத் தளத்தின் வாயலில் நகர மக்கள் கால காலமாக அமைதியான முறையில் வியாபாரம் செய்து கொண்டு இருப்பதை கண்டு சினம் கொள்கிறார். அங்கிருக்கும் வியாபாரிகளையும், வியாபார பொருள்களை கொள்முதல் செய்ய காத்து இருந்த ஒன்றும் அறியா பொது மக்களையும் அடித்து துரத்துகிறார். இன்னும் அதிகபடியாக அந்த வியாபாரிகள் வியாபாரத்திற்காக வைத்து இருந்த உடமைகளை சேத படுத்துகிறார். அங்கிருந்த அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்துகிறார். அங்கு அன்றாட தேவைகளுக்காக பொருளீட்ட வந்த ஒன்றும் அறியா பொது மக்கள், திரு ஏசு அவர்களின் இந்த ஈவு இறக்கமற்ற செயலை கண்டு பயம் கொள்கிறார்கள். இந்த நிகழ்வை பைபிள் இவ்வாறு விவரிக்கிறது:
திரு உமர் அவர்களே, பைபிள் அறிவிக்கும் இந்த சரித்திரத்தின் அடிப்படையில் உங்களிடம் நாங்கள் சில கேள்விகளை கேட்க விரும்புகிறோம்:
திரு உமர் அவர்களே, பைபிளின் பரிந்துரையை ஏற்று நேரடி விவாதத்திற்கு வர மறுக்கும் நீங்கள், இன்னும் அதிக படியாக எழுத்து விவாத நெறிகளை ஏற்று கையெப்பமிட்ட ஒப்பந்தத்தை வெளியிட்டு எழுத்து விவாதம் வரைய மறுக்கும் நீங்கள், இந்த கட்டுரைக்குயேனும் உங்கள் சொந்த கூற்றை விளக்கமாக தராமல் தெளிவான பைபிள் வசன ஆதாரத்தை முன் வைத்து எதிர் வாதம் வரைவீர்கள் என்ற நம்பிக்கையில் தற்காலிகமாக விடை பெறுகிறோம்.. அஸ்ஸலாமு அழைக்கும் -ஜியா & அப்சர் |
நீங்கள் அறிந்து கொண்டே உண்மையைப் பொய்யுடன் கலக்காதீர்கள். உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள். (அல்குர்ஆன் 2:42)
Tuesday, April 5, 2011
ஏசு அஹிம்சையை கையாள மறுத்ததாக கூறும் பைபிள் – பாகம் 1, பாதசாரிகளை அடித்து வெளியேற்றிய ஏசு...
Saturday, April 2, 2011
“இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?” என்ற கட்டுரைக்கு மறுப்பு
| அஸ்ஸலாமு அழைக்கும் - சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாகுக திரு உமர் அவர்களின் “இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?” என்ற கட்டுரைக்கு மறுப்பு: அன்பார்ந்த வாசகர்களே, திரு உமர் அவர்கள் “இடையரை (முஹம்மதுவை)ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?” என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை வெளியிட்டு இருந்தார், அந்த கட்டுரையில் திரு உமர் அவர்கள் வெளியிட்டு இருந்த புஹாரி ஹதீஸ் ஆதாரம்:
திரு உமர் அவர்கள், இதற்கு முன்னர் ஒரு கட்டுரையில், தான் எவ்வாறு கட்டுரை வரைவதாக விவரித்து இருந்தார். அந்த கட்டுரையில், திரு உமர் அவர்கள்: "ஒரு கருத்தை விவரிப்பதற்கு முன் அந்த கருத்தை ஒன்றிய அணைத்து விவரங்களையும் அறிந்த பிறகே அந்த விளக்கத்தை வெளியிடுவதாக மாறு தட்டி கொண்டார்". ஆனால் இதற்கு மாறாக “இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?” என்ற இந்த கட்டுரையை வெளியிடுவதற்கு முன்னர், இந்த கருத்துக்கு ஒன்றிய வேறு எந்த ஆதாரத்தையும் திரு உமர் அவர்கள் ஆராய்ந்து இந்த கட்டுரையை வரைந்ததற்கான எந்த சுவடையும் திரு உமர் அவர்கள் விட்டு வைக்கவில்லை. இன்னும் அதிகபடியாக, புஹாரி தொகிர்ப்பில் இந்த ஹதீஸை எடுத்த திரு உமர் அவர்கள், இதற்கு முந்திய மற்றும் பிந்தைய ஹதீஸ்களை எதற்காக படிக்க மறுத்தார் என்பது நமக்கு வியப்பாக உள்ளது. அப்படி அவர் அந்த ஹதீஸ்களை படித்து இருப்பாராயின் எதற்காக அதை வெளியிடாமல் மறைத்தார் என்பது திரு உமர் அவர்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். திரு உமர் அவர்கள் வெளியிட்ட ஹதீஸ் 5255 , திரு உமர் அவர்கள் வெளியிட மறுத்த ஹதீஸ்கள் 5254 ,5256 & 5257 :
திரு உமர் அவர்கள் வெளியிட்ட ஹதீஸ் ஆதாரத்திலும், இன்னும் மேலே கோடிட்ட ஹதீஸ்களிலும், அல்ஜவ்ன் குலத்துப் பெண்ணான உமைமா பின்த் நுஅமான் இப்னி ஷராஹீல் என்பவருடன், முஹம்மத் நபி (ஸல்) அவர்களுக்கு, இதற்கு முன்னரே முறையே திருமணம் ஒப்பந்தம் முடிந்து இருந்தது என்பதை தெளிவாக அறிவிக்கிறது. இதை கைப்பிடி சோற்றில் பூசணியை மறைக்கும் முயற்சியாக, திரு உமர் அவர்கள் தனக்கே உரிய வார்த்தை ஜாலத்தை முன் வைத்து மறைக்க முயன்றுள்ளார். இந்த தருணத்தில் திரு உமர் அவர்களிடம் நாம் சில கேள்விகளை கேட்க விரும்புகிறோம்.
திரு உமர் அவர்களே, இதற்கு முன்னரே உங்களிடம், எங்கள் எழுத்து விவாத அழைப்பை ஏற்று, கையெப்பம் இட்ட ஒப்பந்தத்தை வெளியிட்டு விட்டு, கட்டுரை வரைய துவங்குமாறு நாங்கள் பல முறை அறிவித்து விட்டோம். இவ்வாறு செய்ய துணிவில்லாத நீங்கள் இனி கனவிலும் இஸ்லாமியர்களை எழுத்து விவாததிருக்கு அழைக்க மாட்டீர்கள் என்று நங்கள் நம்புகிறோம். இனியேனும் கட்டுரை வரைய முனைவதற்கு முன்னர் அந்த கருத்துக்கு ஒன்றிய அணைத்து ஆதரங்களையும் ஆராய்ந்து அறிந்த பிறகு கட்டுரை வரைய துவங்குமாறு உங்களை வேண்டி விரும்பி கேட்டு கொள்கிறோம். அஸ்ஸலாமு அழைக்கும், -ஜியா & அப்சர் |
